தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு இதுவரையிலும் வெளிநாட்டில் இருந்து 18 பேர் வந்துள்ளனர் என பெரியகுளம் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது தமிழக அரசின் உத்தரவின்படி 18 பேர் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புடன் தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 18 பேருக்கு வைரஸ் நோய் உள்ளதா என்ன மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கூட கொரோனா தொற்றுநோய் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது இருப்பினும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் அவர்களின் வீட்டின் வெளிப்புறம் அவர்களின் முழு விவரம் பற்றிய அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் ஒரு சில நபர்களின் விவரங்கள் இன்னும் சரி வர தெரியவில்லை அதனால் பொதுமக்களின் நலன் கருதி பெரும் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கும்படி பெரியகுளம் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் கோரிக்கை விடுத்தார் இவன்
வெளிநாட்டிலிருந்து பெரியகுளம் வந்த 18 பேர் தனிமைப்படுத்தபட்டு தீவிர கண்காணிப்பு