" alt="" aria-hidden="true" />
கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
" alt="" aria-hidden="true" />
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கும் கபசுர குடிநீரை மணியம் எலக்ரிகல்ஸ் இந்திரா சுந்தம் (ரோட்டரி எவரஸ்ட்) வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />
அவிநாசி ரோடு பூண்டி வரையிலும், காங்கயம் ரோடு நாலூர் வரையிலும், திருப்பூர் நகர் பகுதிகள் முழுவதிலும் உள்ள அணைத்து பகுதிகளுக்கும் சென்று காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்கள், தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள துப்பரவு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
" alt="" aria-hidden="true" />
அவர்களுக்கு வழங்கும் சமயத்தில் அருகில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />
சுமார் 300 நபர்களுக்கான கபசுர குடிநீரை தனது வீட்டிலேயே தயாரித்து எடுத்து சென்று கொடுத்துள்ளார்.
" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீரை குடிக்க அரசே பரிந்துரை செய்கிறது. இந்நிலையில் இவரின் இந்த செயலை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.